நம்புதாளை மீனவர் துபாயில் மரணம் தமிழக அரசு நிவாரணம் தர கோரிக்கை

தொண்டி, அக். 18:  தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்தவர் தூய்டியய்யா (35). மீனவரான இவருக்கு திருமணாகி, 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த மாதம் துபாய் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றிருந்தார். கொரோனா தடுப்பில் தனிமையில் இருந்த அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்ல தயாரான நிலையில் திடீரென இறந்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடலை கொண்டு வர போதிய வசதி இல்லாததால் அங்கேயே அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 3 குழந்தைகளுடன் வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் குடும்பத்திற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து தூண்டியய்யா குடும்பத்தினர் கூறியதாவது, ‘குடும்ப தலைவரின் வருமானத்தில் மட்டுமே குடும்பம் நடத்தி வந்தோம். துபாய் போய் 15 நாளில் இறந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவர் உடலை கொண்டு வர கூட வழியில்லாமல் அங்கேயே அடக்கம் செய்ய சொல்லி விட்டோம். சிறு குழந்தைகளை வைத்து கொண்டு மிகவும் கஷ்டப்படுகிறோம். தமிழக அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>