×

பாசன வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள் விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி, அக். 18: புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகளால் விவசாயிகள் வேதனையடைகின்றனர். பொள்ளாச்சி அருகே புதிய ஆயக்கட்டு பாசத்திற்குட்பட்ட வாய்க்கால் செல்கிறது. ஆண்டுதோறும் ஆழியார் அணையில் திறக்கப்படும் தண்ணீர் ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட வாய்க்கால் வழியாக செல்கிறது. இதனால், பல்வேறு கிராமங்களை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆனால், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட  வாய்க்காலின் பல இடங்களில்  முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் குறிப்பிட்ட சில இடங்களில் புதர்மண்டியது. மேலும், இந்த வாய்க்காலின் பல இடங்களில் கழிவுகள் கொட்டி செல்வது அதிகரித்துள்ளது. இதில் அங்கலக்குற்ச்சி உள்ளிட்ட சில இடங்களில்  இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகிறது.  வாய்க்காலில் ஆங்காங்கே கழிவுகள் கொட்டப்படுவதால், விவசாயத்துக்கு செல்லும் தண்ணீரானது சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வாய்க்காலில் கழிவுகளை கொட்டுவதை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை