நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ரத்து திமுக கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

திருச்சுழி, அக். 2: நரிக்குடி ஒன்றியத்தில் நேற்று கவுன்சிலர் கூட்டம் நடைபெறுமென அனைத்து கவுன்சிலர்களுக்கும் அஜந்தா( கூட்டப்பொருள்) அனுப்பப்பட்டது. ஆனால், திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். ஆனால் சேர்மன், துணை சேர்மன் மற்றும் மூன்று கவுன்சிலர் பங்கேற்றனர். 14 பேரில் 5 பேர் மட்டுமே பங்கேற்றதால் கூட்டம் நடத்த இயலாத எனவும், அசாதாரண சூழ்நிலை உள்ளதாக கூறி பிடிஓ சுப்பிரமணியிடம் கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு கூறிவிட்டு கையெழுத்திடாமல் சேர்மன் பஞ்சவர்ணம் கூட்ட அரங்கத்தை விட்டு சென்றார். இதனையடுத்து அதிகாரிகளும் சென்றனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் வராததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து துணைசேர்மன் ரவிச்சந்திரன் கூறுகையில், ``ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டுமென இங்குள்ள அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்’’ எனக் கூறினர். திருச்சுழி டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கொலை வழக்கு விசாரணையை டிஎஸ்பி கண்காணிக்க வேண்டும்.

Related Stories: