×

கொட்டையூரில் பருத்தி ஏலம்

பாபநாசம், அக். 1: பாபநாசம் அருகே கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் ரூ.30 லட்சம் மதிப்பிலான பருத்தியை கொண்டு வந்திருந்தனர். பண்ருட்டி, விழுப்புரம், கும்பகோணம், செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த 6 வணிகர்கள், இந்திய பருத்தி கழகத்தினர் பங்கேற்றனர். குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.4,649, குறைந்தபட்சமாக ரூ.3,900, சராசரியாக ரூ.3,900 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

Tags : Cotton auction ,Kottayam ,
× RELATED மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம் உறவினரை வெட்டி கொன்ற தொழிலாளி