×

எல்பிஎப் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், அக்.1: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவக்க வேண்டும். 240 நாள் பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என வலியுறுத்தி, திண்டுக்கல்  அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு எல்பிஎப் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் அலுவலக பிரிவு பொதுச் செயலாளர் ராஜேந்திரகுமார், பணிமனை 3 கிளை நிர்வாகிகள் பழனிச்சாமி, மனோகரன், பணிமனை 2 கிளை நிர்வாகிகள் முருகன், பாபு, ஹெச்.எம்.எஸ் மண்டல பொதுச் செயலாளர் முருக பாண்டியன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : LPF ,protest demonstration ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு