×

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆவூர் மேட்டு காலனி சேர்ந்தவர் ரவி. இவரது மகன் புகழேந்தி (20). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த எழிலரசன் என்பவரின் 16வயது மகள் பொன்னேரி உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரும் புகழேந்தியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் புகழேந்தி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்தவுடன் பிரியாவின் தந்தை எழிலரசன் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் வழக்குப் பதிந்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Tags : student ,Pok போகmon ,
× RELATED மாணவர் சங்க முன்னணி ஊழியர்களுக்கான பயிலரங்கு