×

மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் நெல்கொள்முதல் நிலையங்கள் அழியும் ஆர்ப்பாட்டத்தில் ஐ.பெரியசாமி எம்எல்ஏ பேச்சு

சின்னாளபட்டி, செப்.30:  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, ஆத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட திமுக துணை செயலாளர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் காணிக்கைசாமி, ஒன்றிய துணை தலைவர் ஹேமலதா முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி பேசுகையில், ‘‘ஆத்தூர் மற்றும் சித்தையன்கோட்டை பகுதியில் விளையும் நெற்பயிர்களை திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் விற்று வந்தனர்.

மோடி அரசின் வேளாண் சட்டங்களால் அந்த கொள்முதல் நிலையங்கள் அழிந்துவிடும். இதை உணர்ந்து மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தார். மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் பாலசுப்பிரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசு, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரபாகரன், ஊராட்சி ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல், கருத்தராஜா, கலாபச்சை, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாறைப்பட்டி பாலாஜி, மல்லையாபுரம் லட்சுமி சக்திவேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிந்தாமணி, செல்வி காங்கேயன், பாப்பாத்தி, ஆத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் சையது அபுதாகிர், கிளை செயலாளர் சித்திரன், நாசர்கனி உட்பட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : I. Periyasamy MLA ,paddy procurement centers ,protest ,Central Government ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...