×

நேற்றும், இன்றும் அனுப்புகின்றனர் தமிழக அரசு மருந்தாளுநர்கள் அமைச்சருக்கு கோரிக்கை கடிதம்

நெல்லை, மார்ச் 19: தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கத்தினர் தங்களது 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 2 நாள் தபால் மூலம் மனு அனுப்பி வருகின்றனர். தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்குவது, 32 மாவட்ட மருந்து கிடங்கு அலுவலர் பணியிடம் உருவாக்குதல், சங்க நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடுவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ குறியீட்டின்படி  கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி கனிவுடன் பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதி வழங்கப்பட்டது. அதன்படி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்த சங்கத்தினர் அமைச்சருக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்தனர். நெல்லை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மருந்தாளுநர்கள் தனித்தனியாக கடிதம் நேற்று அனுப்பினர். இன்றும் இப்பணி நடக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : Minister ,Tamil Nadu Pharmacists ,
× RELATED கடைகளில் மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும்