×

இளம்பிள்ளையில் 45 லட்சத்தில் பாலம், தார்சாலை பணி

இளம்பிள்ளை, மார்ச் 18: இளம்பிள்ளை பேரூராட்சியில் 45 லட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் பாலம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
இளம்பிள்ளை பேரூராட்சியில் 14வது நிதிக்குழு மானிய  திட்டத்தின் கீழ், 5வார்டு சவுடேஸ்வரி  நகர் பகுதியில் ₹45 லட்சம்  மதிப்பில் தார்சாலை மற்றும் சிறிய பாலம் அமைக்க நேற்று பூமி பூஜை நடைபெற்றது.

மனோன்மணி எம்எல்ஏ துவக்கி வைத்தார். விழாவில் வீரபாண்டி ஒன்றியக்குழு  தலைவர் வருதராஜ், இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன்,  இளம்பிள்ளை கூட்டுறவு சங்க தலைவர் துளசி ராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வரதராஜ்  மற்றும் சேட்டு நடராஜ், பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : bridge ,Ilampillai ,
× RELATED பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது