×

சாலையை கடந்தபோது விபத்தில் வாலிபர் பலி

சேலம், ஜூன் 23: கர்நாடக மாநிலம் பெங்களூரூவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் தீட்சித்குமார்(28). நேற்றுமுன்தினம் சேலம் வந்த இவர், கருப்பூர் சாமிநாயக்கன்பட்டியில் உள்ள லிங்கபைரவர் கோயிலுக்கு சென்றார். பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டு விட்டு இரவு 8மணியளவில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அருகே சாலையை கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட தீட்சித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கருப்பூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலையை கடந்தபோது விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Bengaluru, Karnataka ,Dixit Kumar ,Lingabhairavar temple ,Saminayakanpatti, Karuppur ,Poornami puja ,
× RELATED போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா...