×

கோயில்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கோவை, மார்ச் 18:  தமிழகத்தில் கொரோனா பாதிப்பினை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடாமல் இருக்கும் வகையில் மால்கள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள், டாஸ்மாக் பார்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் தடுப்பு நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இந்துசமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கோயில்களில் பக்தர்களின் நலன் கருதி கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தவிர, கொரோனா தொடர்பான விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கை, கால்களை கழுவும் இடங்களில் சோப்பு, கிருமி நாசினி வைத்துள்ளனர். அதன்படி, கோவை கோனியம்மன் கோயில், சங்கமேஸ்வரர் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், தண்டுமாரியம்மன் கோயில், மருதமலை உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், கோனியம்மன் கோயிலில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் சார்பில் பக்தர்கள், ஊழியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.
மேலும், கோயில் வளாகத்தில் உள்ள கைப்பிடிகள், பொதுமக்கள் நிற்கும், அமரும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது என கோயில் செயல் அலுவலர் கைலாசமூர்த்தி தெரிவித்தார்.

Tags : disinfectant spraying ,temples ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா