×

சோழவந்தான் அருகே கபடி போட்டி

சோழவந்தான், மார்ச் 17: சோழவந்தான் அருகே குருவித்துறையில் மதுரை மாவட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கபடி போட்டி நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் ரம்யா நம்பிராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் சுபாஷினி வரவேற்றார். மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் பூபதி போட்டியை துவக்கி வைத்தார்.

மாவட்ட அளவில் 15 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் அரசு கள்ளர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாயக்கண்ணன் நடுவராக செயல்பட்டார். இதில் அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. அய்யங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி இரண்டாம் பரிசையும், விக்கிரமங்கலம் ஜெயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி மூன்றாம் பரிசையும் பெற்றனர். இவர்களுக்கு அரவிந்த் மீரா பள்ளி சேர்மன் டாக்டர் சந்திரன், பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினார். முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கபிலன், உசிலம்பட்டி வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்தினர்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன்மாறன், முன்னாள் ஊராட்சி தலைவர் கர்ணன், ஊராட்சி துணை தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kabaddi Tournament ,Cholavandan ,
× RELATED சோழவந்தான் அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை