×

பாலக்காடு-திருச்செந்துார் ரயில் இயக்கத்தில் மாற்றம்

கோவை, மார்ச்17:ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதன் காரணமாக பாலக்காடு - திருச்செந்துார் ரயில் இயக்கத்தில் மாற்றம்  செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட வாஞ்சிமணியாச்சியை அடுத்துள்ள பகுதிகளில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடப்பதால் பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கும் பாலக்காடு - திருச்செந்துார் பயணிகள் ரயில் பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ரயில் எண் 56769/56770 ஆகியவை மார்ச் 16, 17, 19, 20, 21, 23, 24, 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவில்பட்டியுடன் நிறுத்தப்படும். அதே போல் மார்ச் 18, 22, 25 ஆகிய தேதிகளில் மதுரையுடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
× RELATED உலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்