×

திரளான பக்தர்கள் பங்கேற்பு கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஹைப்போ குளோரைடு மருந்துகள் ஸ்பிரே அடிக்க நடவடிக்கை


கந்தா–்வகோட்டை, மார்ச்17: கந்தா–்வகோட்டை பகுதியில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க அறந்தாங்கி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார பணியாளா–்கள் ஸ்பிரே அடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். புதுநகா் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் சந்தோஷ் தலைமையில் கந்தா–்வகோட்டை ஒன்றியத்தில் அரசு பேரூந்து பணிமனை, பேரூந்து நிலையம், அரசு மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் பாதுகாத்து கொள்ள லைசால் ஸ்பிரே மற்றும் ஹைப்போ குளோரைடு மருந்துகள் ஸ்பிரே சுகாதார பணியாளா–்களால் அடிக்கப்பட்டது.இதனை வட்டார சுகாதார மேற்பார்வையாளா் பொறுப்பு முத்துக்குமார் சுகாதார ஆய்வாளா–்கள் பழனிச்சாமி, நல்லமுத்து, திருநாவுக்கரசு மேற்கொண்டனர். தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சதீஷ் முன்னிலையில் மருந்து ஸ்பிரே அடிக்கப்பட்டது.

Tags : devotees ,
× RELATED புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல்...