×

30 சமையலர் காலி பணியிடம் விண்ணப்பிக்க 28ம் தேதி கடைசி

திருவாரூர், மார்ச் 17: திருவாரூர் மாவட்டத்தில் பிற்பட்டோர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 30 சமையலர் பணியிடங்களுக்கு வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,திருவாரூர் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள 30 சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி 16 ஆண் சமையலர் பணியிடத்திற்கு இனசுழற்சி முன்னுரிமைபடி பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு தலா ஒரு இடம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 2 இடம், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் ஒரு இடம்,அருந்ததியினருக்கு ஒரு இடம் ஆகும். மேலும் முன்னுரிமையற்ற பிரிவில் பொது பிரிவினருக்கு 3 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் 2 இடங்களும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 3 இடங்களும், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கு 2 இடங்களும் என மொத்தம் 16 இடங்களாகும். இதேபோல் 14 பெண் சமையலர் பணியிடத்திற்கு இனசுழற்சி முன்னுரிமை பிரிவில் பிற்பட்டோர் ஒரு இடம், பிற்பட்டோர் (முஸ்லிம்) ஒரு இடம், அருந்ததியினர் ஒரு இடம் ஆகும். முன்னுரிமை யற்றவர்கள் பிரிவில் பொதுப்பிரிவினருக்கு 2, பிற்படுத்தப்பட்டோர் 3, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 3, தாழ்த்தப்பட்டவர்மற்றும் பழங்குடியினர் 3 என மொத்தம் 30 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான தகுதிகள் தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும் சுவையாகவும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும், வயது வரம்பாக தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் 18 முதல் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 32 வயதிற்குள்ளும், இதர பிரிவிர் 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எனவே மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் திருவாரூர் மாவட்ட இணையதள முகவரியில் இருந்து இதற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை உரிய சான்றுகளுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி வரும் 28ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் வேலை நாட்களில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருவாரூர் மாவட்ட கலெக்டர் விளக்கம்...