×

அன்னவாசல் அருகே தாண்டீஸ்வரத்தில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 17 பேர் காயம்

இலுப்பூர், மார்ச் 13: அன்னவாசல் அருகே உள்ள தாண்டீஸ்வரம் சத்ரு சம்ஹார மூர்த்தி கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் 792 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன. 209 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனர். காளைகள் முட்டியதில். மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 17 பேர் காயம் அடைந்தனர். புதுக்கோட்டை அருகே அன்னவாசல் அருகே தாண்டீஸ்வரத்தில் உள்ள சத்ரு சம்ஹார மூர்த்தி கோயிலில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு கோயில் அருகே உள்ள திடலில் நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கியது.

மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சின்னதம்பி துவக்கி வைத்தார். இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சிகுமார், டிஎஸ்பி சிகாமணி, கீரனூர் டிஎஸ்பி பிரான்சிஸ் ஆகியோர் ஜல்லிக்கட்டை கண்காணித்தனர். முன்னதாக அன்னவாசல் அரசு மருத்துவமனை மற்றும் பரம்பூர் ஆரம்பு சுகாதா நிலைய மருத்துவமனை மருத்துவர்கள கொண்ட குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்தனர். இதில் உடல் தகுதியான 209 மாடுபிடி வீரர்கள் பல பிரிவுகளாக மாடுகளை பிடிக்க அனுமதிக்கபட்டனர். திருச்சி, புதுக்கோட்டை,

அன்னவாசல் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்று வட்டார பகுதியில் இருந்தும் அழைத்து வரப்பட்ட 794 ஜல்லிக்கட்டு காளைகள் கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னர் வாடி வாசலில் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். பிடிபடாத காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் ரொக்கம், சேர், பேன், பாத்திரங்கள் போன்ற வீட்டு உபயோக பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உட்பட 17 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிகட்டு மாலை 3 மணி வரை நடைபெற்றது. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.

Tags : Annavasal ,
× RELATED வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 8...