×

மின்வாரியத்தை கண்டித்து மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மார்ச் 13: பெரம்பலூரில் தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை வழங்க காலம்தாழ்த்தும் மின்வாரியத்தை கண்டித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் கோருபவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மாதங்கள் பல கடந்தும் பயணப்படி, இரட்டிப்பு ஊதியம் வழங்காமல் இருப்பதை விரைந்து வழங்க வேண்டும். அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி மக்களின் வரிப்பணத்தை வீணாக்க கூடாது, மறு சீரமைப்பு என்ற பெயரில் பொதுத்துறையான மின்துறையை சிறு சிறு துண்டுகளாக்கி தனியாரிடம் ஒப்படைத்து 90,000 ஓய்வூதியர்கள், 80,000 ஊழியர்களின் வாழ்வாதாரம், மின் நுகர்வோரின் உரிமைகளை சீரழிக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி பெரம்பலூர் நான்குரோடு அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மாவட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார்.

வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், வட்ட பொருளாளர் கண்ணன், வட்ட துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் வட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வட்ட பொருளாளர் செல்வக்குமார், வட்ட துணைத்தலைவர் ஆல்பர்ட் அருமைராஜ், வேல்முருகன் மற்றும் மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வட்ட கன்வீனர் ராஜகுமாரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த நாராயணன், காசிநாதன், கோபிநாத், ராஜா, அண்ணாதுரை, பாலகிருஷ்ணன், நல்லுசாமி, கண்ணன், புவனேஸ்வரி, ஆறுமுகம், செல்வகுமார், தமிழ்ச்செல்வன் உள்ளி–்ட்ட பலர் பங்கேற்றனர். வட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் நன்றி கூறினார்.

Tags : protests ,Power Employees Central Organization ,
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...