×

சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டியில் 222 பயனாளிகளுக்கு 5550 கோழிக்குஞ்சுகள்

சேந்தமங்கலம், மார்ச் 13: சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டியில், 222 பயனாளிகளுக்கு 5550 கோழிக்குஞ்சுகளை சந்திரசேகரன் எம்எல்ஏ வழங்கினார். கால்நடைப்பராமரிப்பி துறை சார்பில், ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு கோழி வழங்கும் விழா சேந்தமங்கலம் கால்நடை மருத்துவமனையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கால்நடை மருத்துவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்து கொண்டு 109 பயனாளிகளுக்கு 2725 கோழிக்குஞ்சுகளை வழங்கினார்.

இதேபோல், காளப்பநாயக்கன்பட்டியில் 113 பயனாளிகளுக்கு 2825 கோழிக்குஞ்சுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் முத்துகுமார், நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் வீரப்பன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் பழனிசாமி, நிர்வாகிகள் கென்னடி, நடராஜன் கோகுலகிருஷ்ணன், வெண்ணிலா செந்தில், பூபதி, சின்னுசாமி, ஸ்டாரா செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : poultry farms ,
× RELATED புரட்டாசி முடிந்ததால் முட்டை விலை...