×

வைகுண்டம் அருகே 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் கிராம மக்கள் அவதி

தூத்துக்குடி, மார்ச் 13: வைகுண்டம் அருகே மணக்கரை நடுவக்குறிச்சி கிராமத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அவதிப்படும் மக்கள், விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்துவைகுண்டம் தாலுகா, மணக்கரை பஞ்சாயத்து நடுவக்குறிச்சி ஊர் பொதுமக்ள் சார்பில் குமரன் என்பவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு: கொங்கராயகுறிச்சியில் இருந்து வல்லநாடு செல்லும் பிரதான சாலையில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் எங்கள் கிராமம் அமைந்துள்ளது. மெயின்ரோட்டில் இருந்து நடந்து செல்லவேண்டிய  எங்கள் கிராமத்திற்கு இதுவரை தார் சாலை அமைக்கப்படவே இல்லை. தொடர்ந்து விடுத்த கோரிக்கையை அடித்து மெட்டல் சாலை போடப்பட்டது. ஆனால், இரு வருடங்களாகியும் இதுவரை தார் சாலை அமைக்கப்படவே இல்லை. இதனிடையே மெட்டல் சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்களால்  இரு சக்கர வாகனஓட்டிகள் உள்ளிட்ட பலரும் அவதிப்படுகின்றனர். இதனிடையே இச்சாலையின் குறுக்காக விளைநிலங்களில் மீதமாகும் தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட வடிகால் மீது கற்களால் அமைக்கப்பட்ட பாலமும் உடைந்து சேதமாகியுள்ளது. மேலும் எந்நேரத்திலும் இடிந்துவிழும் அபாயம் நிலவுகிறது.

 எனவே, எங்கள் கிராமத்திற்கு தார் சாலை அமைக்கும் போது பழுதான வடிகால் மடைக்குரிய பாலத்தையும் புதுப்பித்துதரக்கோரியும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் சாலை மறியலில் ஈடுபட முடிவுசெய்தோம். இதையடுத்து வைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் 3 மாதங்களில் தார் சாலை அமைத்துத்தரப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.ஆ னால், இன்னும் தார் சாலை அமைக்கப்படவே இல்லை. எனவே, மக்களிடம் அளித்த உறுதிமொழி படி எங்கள் கிராமத்திற்கு உடனடியாக தார்சாலை அமைக்க வேண்டும். மேலும் உறுதிமொழியை காற்றில் பறக்கும் விடும்வகையில் தொடர்ந்து அலட்சியபோக்குடன் செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags : Vaikundam ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர்...