×

வேளாண்மையில் ஆற்றல் திறன் மேம்பாடு பற்றிய பயிலரங்கம்

கோவை, மார்ச் 13:  வேளாண்மையில் ஆற்றல் திறன் மேம்பாடு பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு பயிலரங்கம் இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ளது.இந்த பயிலரங்கில் நீர் மேலாண்மை, வேளாண்மையில் ஆற்றல் திறன் மேம்பாடு, சூரிய ஆற்றலில் இயங்கும் பம்ப்செட் மற்றும் ஆற்றல் சேமிப்பு பண்ணை கருவிகள் ஆகியன குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்நிகழ்ச்சியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத் மற்றும் தெலுங்கானா மாநில புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுக்கழக அதிகாரிகள், விஞ்ஞானிகள், பம்ப்செட் உற்பத்தியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர். சுமார் 250 விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர்  குமார் இதனை துவக்கி வைக்கவுள்ளார்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை