×

பொன்னேரி அருகே 2 ரவுடிகள் அடித்து கொலை காதல் விவகாரத்தில் நண்பனை தீர்த்து கட்ட முயன்றதால் கொன்றோம்

பொன்னேரி, மார்ச் 12:  பொன்னேரி அருகே வாலிபால் போட்டியின்போது, நண்பனிடம் தகராறில் ஈடுபட்டதால், ரவுடிகள் இருவரையும் கொன்றோம் என கைதான இரண்டு வாலிபர்களும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தில் வாலிபால் போட்டியின்போது ஏற்பட்ட தகராறில், ரவுடிகள் வீரா, திவாகர் ஆகிய 2 பேரை உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கி சில நாட்களுக்கு முன் கொலை செய்தனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின்பேரில் பொன்னேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி மேற்பார்வையில்  இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்தார். எஸ்ஐ மகாலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார், ஆலாடு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் சுகன், தீபன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் அளித்த வாக்குமூலம் என  போலீசார் கூறியதாவது:  ஆலாடு காலனியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (23). இவரது நண்பர் கௌதம். ஜெயபிரகாஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவியை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்துள்ளார்.

இந்நிலையில், ஜெயபிரகாஷ் கஞ்சா போதையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, கௌதம் மருத்துவ கல்லூரி மாணவியிடம் ஜெயப்பிரகாஷ் பற்றி தவறாக சொல்லி உள்ளார். அதன் பிறகு விரக்தி அடைந்த அவர், கடந்த 6 மாதத்துக்கு முன்பு மேல்படிப்புக்காக  அமெரிக்காவுக்கு சென்று விட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஜெயப்பிரகாஷ் காதலி செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது, உன்னை பற்றி தவறாக கௌதம் என்னிடம் கூறினார் என்று கூறியுள்ளார். இதனால், ஜெயப்பிரகாஷ், கௌதம் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஜெயப்பிரகாஷை தீர்த்துக்கட்ட கௌதம் பொன்னேரி பல்லம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் வீரா, திவாகர் ஆகியோரின் உதவியை நாடினார். கடந்த 8ம் தேதி அப்பகுதியில் வாலிபால் போட்டியின்போது வீராவும், திவாகரும் ஜெயபிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, ஜெயப்பிரகாஷ், தனது நண்பர்கள் சுகன், தீபன் ஆகியோருடன் சேர்ந்து வீரா, திவாகர் ஆகிய இரண்டு பேரையும் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் அடித்து கொன்றோம் என்று வாக்குமூலத்தில்  கூறியதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு சுகன் (22) தீபன் (22) ஆகிய இருவரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : rounds ,love affair ,Ponneri ,
× RELATED தூத்துக்குடி தம்பதிக்கு 1.35...