×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு கறம்பக்குடியில் போராட்டக்காரர்கள் வங்கி சேமிப்பு கணக்கை திரும்பபெற்றனர்

கறம்பக்குடி, மார்ச் 12: கறம்பக்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திவரும் முஸ்லிம் அமைப்பினர் நேற்று தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தங்களின் கணக்கை திரும்பபெற்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி இஸ்லாமிய பாதுகாப்பு குழு அமைப்பு சார்பாக குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மேலும் தமிழக சட்ட மன்றத்தில் சட்டத்தை திரும்ப பெற தீர்மானம் நிறைவேற்ற கோரியும் கறம்பக்குடி மதரஸா பள்ளி வாசல் அருகில் கடந்த மாதம் 18ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. நேற்று 22வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதனிடையே இஸ்லாமிய அமைப்பு சார்பாக பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று மத்திய அரசின் பொருளாதார கொள்கை சீர் குலைந்து விட்டது என்று கூறி மேலும் வங்கிகள் திவாலாகி கொண்டு வருகிறது என்று வலியுறுத்தி, குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய பாதுகாப்பு குழு அமைப்பு சார்பாக அனைவரும் ஊர்வலமாக சென்று பொது வங்கிகளான இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளில் தங்களின் வங்கி வரவு செலவு கணக்கு அனைத்தையும் திரும்ப பெற்றனர். ஊர்வலமாக சென்று வங்கிகளில் சென்று 100க்கும் மேற்பட்டோர் தமது வங்கி கணக்கு அனைத்தையும் திரும்ப பெற்றதால் வங்கிகள் முழுவதும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இது குறித்து இஸ்லாமிய பாதுகாப்பு குழு அமைப்பு போராட்ட குழுவினர் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை திரும்ப பெரும் வரையிலும், மேலும் தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று ஒட்டு மொத்தமாக கூறினர்.

Tags : Residents ,protest ,
× RELATED வாய்க்கால் பாலம் இடிப்பு விவகாரம்: இரவு நேரத்தில் பொதுமக்கள் போராட்டம்