×

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அம்மாபட்டினத்தில் 24வது நாளாக போராட்டம்

மணமேல்குடி மார்ச் 12: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அம்மாபட்டினத்தில் தொடர்ந்து 24வது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை கண்டித்து மனித சங்கிலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.குடியுாிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரளா, புதுச்சோி மாநிலங்களைப் போன்று குடியுாிமை சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை வண்ணாரபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசாா் தடியடி நடத்தினா். இதை கண்டித்து தமிழகம் முமுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்தது. இதை தொடந்து அம்மாபட்டினத்தில் நடந்து வரும் போராட்டம் 24 நாட்கள் முடிந்து, 25வது நாளை எட்டியுள்ளது.

இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து 24 மணி நேரமும் கண்டன கோஷங்களும், ஆர்ப்பாட்டங்களும், கண்டன உரைகளும் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு அமைப்புகளையும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கண்டன உரை நிகழ்த்தி வருகின்றனர். நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிறகு திமுக ஊடகப்பிரிவு துணைப் பொதுச் செயலாளர் தமிழன் பிரசன்னா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மண்டலச் செயலாளர் முகம்மது முபாரக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

Tags : Mamapattinam ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம்...