×

ஐன்ஸ்டீன் பிறந்த நாளையொட்டி அரசு பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மன்னார்குடி, மார்ச் 12: அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினத்தையொட்டி மன்னார்குடி அருகே உள்ள பழையனூர் அரசு உதவிபெறும் வேணுடையார் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் நந்தகோபால் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி தேவி முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் ஸ்டீபன்நாதன் கலந்துகொண்டு அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் புகழேந்தி அறிவியலில் சாதனைப் பெண்கள் என்ற தலைப்பிலும், அரிச்சந்திரபுரம் அறிவியல் ஆசிரியர் முரளி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பிலும் பேசினர். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பொன்முடி காகிதத்தில் பல்வேறு வடிவங்கள் செய்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தார். மாணவர்களின் “துரித உணவினால் ஏற்படும் தீமைகளை” விளக்கும் அறிவியல் நாடகம், அறிவியல் ஆத்திசூடி, அறிவியல் கண்காட்சி, அறிவியல் புதிர்கள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தலைமையாசிரியர்  கீதா வரவேற்றார். அறிவியல் ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.

Tags : Einstein ,Birthday State School ,
× RELATED ஆண்டனி படத்தின் டிஜிட்டல் உரிமையை...