×

ரெட்டியார்சத்திரம் அருகே விளையாட்டு மைதானத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி பொதுமக்கள் வழங்கினர்

ஒட்டன்சத்திரம், மார்ச் 12: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கே. புதுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்டது பெத்திநாயக்கனூர். இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் குழந்தைகள் விளையாட்டு மைதானம் அமைக்க 3ல் 1 பங்கு தொகையாக பொதுமக்கள், தன்னார்வ அமைப்பினர் ரூ.50 ஆயிரம் வழங்கினர். இதற்கான காசோலை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார், பயிற்சி துணை கலெக்டர் பிரபாகரன், விழுதுகள்- வெற்றித்துளிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குப்புச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : public ,Rettiyasataram ,playground ,
× RELATED பொது பிரிவினருக்கான மருத்துவ...