ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா

உடுமலை, மார்ச் 11:உடுமலை  ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரியின் ஆலோசகர் மஞ்சுளா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஜிவிஜி பெண்கள் கல்லூரியின் என்.சி.சி. அலுவலர் கற்பகவல்லி கலந்து கொண்டார். இதில் பெண்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான சொற்பொழிவுகளும், மகளிர் குறித்த சிறப்புகள், சாதனைகள் பற்றியும் விளக்கி கூறப்பட்டது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி என்.எஸ்.எஸ் அலுவலர் ரகுபதி செய்திருந்தார். மாணவிகள் ஐஸ்வர்யா, ஜனனி ஆகியோர் நன்றி கூறினார்.

Related Stories: