×

15ம் தேதி துவக்கம் பெற்றோர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும்

இலுப்பூர், மார்ச்10: அன்னவாசல் அருகே உள்ள அரசு பள்ளி ஆண்டுவிழாவில் பங்கேற்ற முதன்மை கல்வி அலுவலர் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.அன்னவாசல் அருகே உள்ள பெருமநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கிய விழா,விளையாட்டு விழா பள்ளிஆண்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை வகித்தார். இலுப்பூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை விகித்தார். உதவி தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார். பட்டதாரிஆசிரியை ராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி பேசுகையில்,அரசு பள்ளியில் கணினி வசதி, நவீன ஆய்வக வசதி போன்ற வசதிகள் உள்ளது. மேலும் பள்ளி கல்விதுறையின் சார்பில் விலையில்லா சைக்கிள்,மடிக்கணினி போன்றவைகள் வழங்கப்படுகிறது. திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். ஆகவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றார்.இதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள், .கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும் மாநில மாவட்ட அளவில் விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பாpசுகளை வழங்கினார். விழாவில் பெருமநாடு ஊராட்சித்தலைவர் பழனிச்சாமி, துணைதலைவர் பால்ராஜ், ஒன்றியக்குழு தலைவர் கோவிந்தராஜ் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் கலநது கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் முத்துகுமார் நன்றி கூறினார்.

Tags : parents ,government schools ,children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...