×

டெல்லி கலவரத்தை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, மார்ச் 10: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி சாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறையை கண்டித்து மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு கூட்டமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் வேலு குபேந்திரன் தலைமை தாங்கினார்.ஷேக் அலாவுதீன், சபீக் அகமது ,குணசேகரன், மோகன்குமார், இரணியன், மகேஷ், இளங்கோவன் ,செந்தில், ஷாஜஹான், ராஜசேகர் உட்பட பலர் உரையாற்றினர். ஆர்ப்பாட்ட முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி விஷ்ணுகுமார் நன்றி கூறினார்.

Tags : Mayiladuthurai ,Delhi ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...