×

க.பரமத்தி சுற்று வட்டாரத்தில் கல்குவாரிகளில் இயக்கப்படும் லாரிகள் ஆய்வு செய்யப்படுமா?

க.பரமத்தி, மார்ச் 10: க.பரமத்தி வட்டார கல்குவாரிகளில் உரிய ஆவணங்கள் இன்றியும், போதிய பராமரிப்பின்றி லாரிகள் இயக்கப்படுவதாகவும், அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.க.பரமத்தி ஒன்றியத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்குவாரி பாறைகளில் இருந்து வெடிவைத்து தகர்த்து கற்கள் மற்றும் ஜல்லிகள் வாகனங்கள் மூலம் கிரஷர் செயல்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. க.பரமத்தி சுற்று வட்டாரத்தில் உள்ள கல்குவாரிகள் பல்வேறு இடங்களில் சுமார் 300அடி ஆழம் கொண்டவைகளாக உள்ளது.

கல்குவாரிகளில் எடுக்கப்படும் கற்கள் டிப்பர் லாரி, டிராக்டர்கள் மூலம் மேலே கொண்டு வரப்படுகிறது. இப்பகுதியில் உள்ள பல்வேறு குவாரிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் போதிய பராமரிப்பின்றி தினசரி இயக்குவதாக டிரைவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் ஏற்படுவதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், க.பரமத்தி ஒன்றிய சுற்று வட்டார பகுதிகளில் செயல்படும் பல்வேறு குவாரிகளில் பயன்படுத்தப்படும் லாரிகள், டிராக்டர்கள் முறையான பராமரிப்பின்றி இயக்கப்படுகின்றன. உரிய ஆவணங்கள் முறையாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நிவாரணம் பெற முடிவதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.முறையான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படும் லாரிகளால் குவாரிகளில் பெரும் விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்படும் முன்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் க.பரமத்தி வட்டார கல்குவாரிகளில் இயங்கும் வாகனங்களையும், டிரைவர்களையும் சோதனை நடத்துவதுடன், அவ்வாறு பராமரிப்பின்றியும், ஆவணங்கள் இன்றியும் வாகனங்கள் இயக்கப்பட்டது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்புஇறைச்சி கடையால் கொசுத்தொல்லைகரூர் ஆசாத்ரோடு வணிகர்கள் பொதுமக்கள் அளித்த மனுவில், ஆசாத்சாலையில் பிரியாணி கடைகள் உள்ளன. வேறுஇடத்தில் இறைச்சி வெட்டி சமையல்செய்துவந்தனர்.ஆனால் தற்போது உயிர்க்கோழியை அறுத்து சமையல் செய்வதால் கழிவுகளை சாக்கடையில் கொட்டுகின்றனர், இதனால் சுகாதாரசீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சியிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கொசுத்தொல்லை மர்மக்காய்ச்சல் பரவுவதால் உடனே நடவடிக்கை எடுக்கவேணடும் என குறிப்பிட்டுள்ளனர்.

சமுதாய கூடம் அமைக்க வேண்டும்விடுதலை சிறுத்தைகள் கட்சி மகாமுனி அளித்த மனுவில், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கோவக்குளத்தில் சுமார் 1,000 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கருர், குளித்தலை நகரங்களில் அதிக தொகை கொடுத்து தனியார் இடங்களில் நடத்தும் நிலை உள்ளது.
எனவே கோவக்குளம் மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக சமுதாயக்கூடம் அமைக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Q. ,circuit ,Calvary ,Baramati ,
× RELATED ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு