×

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு பெண்கள் திடீர் சாலை மறியல்: மீஞ்சூர் அருகே பரபரப்பு

பொன்னேரி, மார்ச் 10: மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்படுகிறது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு, செல்போன் டவர் அமைத்தால் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும்.  கதிர்வீச்சின் தாக்கம் அதிகரித்து குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். எனவே, குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என முழக்கமிட்டனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டம் தொடர்ந்தும் சமரச பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்ததும் வந்த போலீசார், சாலை மறியலை கைவிட்டு வட்டார வளர்ச்சி அதிகாரியிடம்  சென்று பேச்சுவார்த்தை நடத்துமாறு அறிவுரை கூறினர். இதை ஏற்க மறுத்த பெண்களை போலீசார் வலுகட்டாயமாக பிடித்து வேனில் ஏற்றினர்.  இதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிடுவதாக கூறிய பெண்கள், வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். செல்போன் டவர் அமைக்க நீதிமன்றம் மூலம் தனியார் நிறுவனம் உத்தரவு பெற்றுள்ளதால் நீதிமன்றத்தை நாடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Meenkoor ,women ,area ,cell phone tower ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...