ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா

காங்கயம்,மார்ச்10: தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் காங்கயம் கிளை 18ம் ஆண்டு துவக்க விழா, மகளிர் தினவிழா, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டுவிழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா, பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா ஆகிய ஐம்பெரும் விழா காங்கயத்தில் நடந்தது. விழாவிற்கு வட்டார தலைவர் பானுஸ்ரீ கார்த்திகா தலைமை தாங்கினார். முன்னாள் வட்டார தலைவர் பூபதி வரவேற்றார். சங்கத்தின் மாநில தலைவர் மணிமேகலை, மாநில துணைத் தலைவர் ஜான் கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>