×

குமாரபாளையத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம்

குமாபாளையம், மார்ச் 6: குமாரபாளையத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டுமென, நாமக்கல் வந்த மத்திய இணை அமைச்சரை, பாஜ மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டார். நாமக்கல்லில் நடந்த புதிதாக மருத்துவ கல்லூரிக்காக கால்கோள் விழாவில் பங்கேற்ற மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவை, நாமக்கல் மாவட்ட பாஜ செயலாளர் ஓம்சரவணா நேரில் சந்தித்து பேசினார். அப்போது, கடந்த 6 மாதங்களில் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஒப்புதல் மற்றும் நிதி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதால் நதி நீர் கெட்டு மாசு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை அருந்தும் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிது. எனவே குமாரபாளையத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம், மருத்துவமனை ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை கேட்டுக்கொண்ட மத்திய  இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, இதகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜ நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Cancer Treatment Center ,Kumarapalayam ,
× RELATED வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்க அழைப்பு