×

சுட்டெரிக்கும் வெயிலால் இரவிலும் தர்பூசணி வியாபாரம் ஜோர்

கம்பம், மார்ச் 6: கம்பத்தில் அதிக வெப்பநிலை காரணமாக இரவு நேரங்களிலும் தர்பூசணி அதிகளவில் வியாபாரம் செய்யப்படுவதால் தர்பூசணி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கம்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் தர்பூசணி வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது .தர்பூசணி கடந்த மாதம் முதலே விற்பனைக்கு வந்து விட்டது. கம்பம் நகரத்தின் முக்கிய வீதிகளில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் நடந்து வருகிறது. பெரும்பாலும் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிகளில் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது.

மொத்த விலை ரூ.13க்கும் சில்லறை விலையில் ரூ.15க்கும் விற்க்கப்படுகிறது. திருவண்ணாமலை, வேலூர், செஞ்சி மற்றும் விழுப்புரம், ஆரணி போன்ற பகுதிகளில் இருந்து தர்ப்பூசணி கம்பம் பகுதிக்கு கொண்டுவரப்படுகிறதுய.
இன்னும் முழுமையாக கோடைகாலம் தொடங்காத நிலையிலேயே தற்சமயம் வெயில் வாட்டி வதைப்பதால் இரவு நேரங்களிலும் தர்பூசணி விரும்பி சாப்பிடுவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரவு 10 மணி வரை தர்பூசணி வியாபாரம் படுஜோராக நடப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இது குறித்து தர்பூசணி மொத்த வியாபாரி ரத்தினம் கூறுகையில், ‘வெயிலின் தாக்கத்தினால் பகலைவிட இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் வருவோர் உடல் குளிர்ச்சியை நாடி தர்பூசணியை வாங்கி உண்கின்றனர். தர்பூசணியில் தொண்ணூறு சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளதாலும், உடலுக்கு தீங்கிழைக்காததாலும் அதிக மக்கள் தர்பூசணியை விரும்பி உண்கின்றனர். அது உடலுக்கு இதமான சுகமான தூக்கத்தை கொடுக்கிறது. உடம்புக்கு நல்லது’ என்றார்.

Tags : Jour ,Sutterick ,Weil ,
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்