×

பெரியகுளம் அருகே நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

பெரியகுளம், மார்ச் 6: பெரியகுளம் அருகே உள்ள தங்கமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் வேல் நகரில் நடைபெற்றது. முகாமினை கல்லூரி தாளாளர் சுகந்தி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மீனாட்சிநாதன் தலைமை வகித்தார். துணை முதல்வர் முருகன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் ரத்ததானம், தியானப்பயிற்சி, கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம், மரம் நடுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது. நிறைவு விழாவிற்கு துணை முதல்வர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சண்முகவடிவு கலந்து கொண்டு சமூக நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் முருகேசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் முத்துப்பாண்டிகிருஷ்ணன், விரிவுரையாளர்கள் திருலோகசந்தர், பாண்டியராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : National Welfare Camp ,Periyakulam ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...