×

குடியிருப்பு பகுதியில் இறந்து கிடக்கும் பன்றிகளால் தொற்று நோய் பரவும் ஆபத்து நகராட்சி கண்டு கொள்ளுமா?

தேவகோட்டை, மார்ச் 6:  தேவகோட்டையில் குடியிருப்பு பகுதியில் இறந்து கிடக்கும் பன்றிகளை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தாத நிலையில், பொதுமக்கள் தொற்றுநோய் பரவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். தேவகோட்டையில் இருந்து பனிப்புலான் வயல் செல்லும் சாலையின் நடுவில்  விவேகானந்தபுரம் வடக்குத் தெரு மற்றும் மேற்குத் தெரு உள்ளது. இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மூன்று இடங்களில் பன்றிகள் இறந்து கிடக்கிறது. தற்போது இறந்த பன்றிகள் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசத் தொடங்கி இருக்கிறது. வீடுகளில் வசிப்போர் பன்றிகளின் துர்நாற்றம் தாங்க முடியாமல் உள்ளனர். மேலும் சாப்பிடக்கூட முடியாத நிலையில் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் இன்னும் இறந்த பன்றிகள் அப்புறப்படுத்தவில்லை. இதுகுறித்து சடகோபன் கூறுகையில், சாதாரணமாகவே பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுகளால் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். இப்போது கொடிய நோய்கள் பரவி வரும் பயத்தில் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : municipality ,areas ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு