×

ரேஷன்கடை புகார்களை குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்க நடவடிக்கை

கடலூர், மார்ச் 5: கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் அரையாண்டு கூட்டம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவரும், ஆட்சியருமான அன்புச்செல்வன் தலைமையில் நடந்தது.  அலுவல் சாரா உறுப்பினர்கள் ரமேஷ் எம்பி, கலைச்செல்வன் எம்எல்ஏ மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 21 அலுவல் சார்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது விநியோக திட்டம் தொடர்பாக மாவட்ட பாதுகாப்பு குழு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  பொது விநியோக திட்ட அங்காடிகள் முறையாக இயங்குகின்றனவா என்பதை கண்காணிக்கவும், அவற்றில் உள்ள முறைகேடுகளை குறிப்பாக  பொது விநியோக திட்ட பொருட்கள் கள்ளச்சந்தைக்கு திருப்பி விடுவது மற்றும் பதுக்குவது ஆகியவைகளை களைவதற்கான ஆலோசனைகளையும் புகார்களையும்  பொதுமக்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக ரேஷன்கடைகளில்  சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதவி மற்றும் தொலைபேசி எண்கள் மற்றும் மாநில நுகர்வோர் சேவை மையத்தின் தொலைபேசி எண் ஆகியவைகளை அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும்.

மேலும் ரேஷன்கடைகளில் பொருட்கள் விநியோகத்தில்  ஏற்படும் குறைபாடுகள் குறித்து புகார் மனுக்கள் 107 குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அனுப்பப்படும் புகார்களின்  மீது மாவட்ட குறைதீர் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. பொது விநியோகத்தை மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் வாரந்தோறும் தொடர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கை  குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன்,  சிதம்பரம் மற்றும் விருத்தாசலம்  சார் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன்,  மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மரக்காணம் அருகே பட்டாசு...