×

பொருளாதார அடிப்படையில் தமிழகத்தை கட்டமைக்க அரசு நடவடிக்கை தேவை: சேத்தூரில் மகேந்திரன் பேட்டி

ராஜபாளையம், மார்ச் 5: ராஜபாளையம் அருகே சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் லிங்கம் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சி. மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ` டெல்லியில் நடந்த வன்முறை குறித்து விசாரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்துகிறார்கள். இதனால் மக்களவை, மாநிலங்களவை நடத்த முடியாமல் வரும் 11ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  வரலாற்றில் நடந்த மிகப்பெரிய வன்முறை என்பது டெல்லி வன்முறையாக தான் இருக்கும். இதை விவாதிக்க முடியாது என்று பாஜ  கூறுவது கண்டிக்கத்தக்கது.

தமிழக பட்ஜெட்டில் ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடன் இருக்கும் நிலையில்  ஒவ்வொருவரின் தலையிலும் சராசரியாக ரூ. 45 ஆயிரம் கடன் சுமத்தப்பட்டுள்ளது. பொருளாதார அடிப்படையில் தமிழகத்தை கட்டமைப்பதற்கு உரிய அனைத்து முயற்சிகளையும் அரசு செய்ய வேண்டும். நிர்பயா கொலை விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. குற்றவாளிகளின் தூக்குத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வருகிறது. இதன் மர்மங்கள் இந்திய மக்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது’’ என்றார்.

Tags : Government ,Tamil Nadu ,Chetur ,Mahendran ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...