×

உசிலம்பட்டி, செல்லம்பட்டி யூனியன்களில் கவுன்சிலர்கள் கூட்டம் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

உசிலம்பட்டி, மார்ச். 5: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று யூனியன் சேர்மன் ரஞ்சனிசுதந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 13 ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் 21 தீர்மானங்கள் போடப்பட்டு வாசிக்கப்பட்டது. இந்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மீதியுள்ள கவுன்சிலர்கள் மெஜாரிட்டியாக இருந்ததால் 21 தீர்மானங்களும் ஒருமனதாக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்டது. இதேபோல் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூனியன் சேர்மன் கவிதாராஜா தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல தீர்மானங்கள் அனைத்து கவுன்சிலர்கள் முன்னிலையில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

Tags : Meeting ,Councilors ,Usilampatti ,Chellampatti Unions ,
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...