×

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பாம்பு புகைப்பட கண்காட்சி துவக்கம்

புதுக்கோட்டை, மார்ச்5: தமிழகத்திலேயே மிகப் பெரிய இரண்டாவது அரசு அருங்காட்சியகம் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம். இங்கு பல்வேறு விதமான பாம்புகள், பறவைகள், விலங்கினங்கள், உள்ளிட்டவைகளும் பழங்கால முதுமக்கள் தாழிகளில் மன்னர்கள் உபபோகித்த ஆயுதங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் அரசு அருங்காட்சியகத்தில் பாம்புகள் புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகத்தில் கொடிய விஷமுள்ள பாம்பு வகைகள் புகைப்படங்களை கண்காட்சியில் வைத்துள்ளனர். மேலும் அருங்காட்சியகத்தில் பாடம் செய்து வைத்துள்ள நிஜ பாம்புகள் ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.

இந்த பாம்புகள் கண்காட்சியை 10 தினங்கள் பள்ளி சிறுவர்-சிறுமிகள் கண்டு ரசிக்கலாம் என்று அரசு அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளி சிறுவர் சிறுமியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர். புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்திற்கு வந்து பாம்புகள் கண்காட்சியை பார்வையிட்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ள அரிய வகை விலங்கினங்கள் பறவைகள் ஆகியவற்றையும் கண்டு ரசித்தனர் மேலும் அருங்காட்சியகத்தில் 20 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்ட டைனோசர் உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Opening ceremony ,snake photo exhibition ,Pudukkottai ,Government Museum ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...