×

பாஜ மாநில செயலாளர் வேதரத்தினம் பேட்டி சம்பளம் முறையாக வழங்க கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறை, மார்ச்5:  நாகை மாவட்டம் மயிலாடுதுறை சித்தர்காட்டில் நவீன அரிசி ஆலையும் நெல்கிடங்கும் உள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங் களில் நடக்கும் முறைகேடு குறித்து அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படவில்லை, அதிகாரிகளிடம் கேட்டால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, இது தொடர்பாக நேற்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சுமைதூக்கும் அனைத்து தொழிலாளர் சங்கத்தினரும், 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டாக களத்தில் இறங்கினர். நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டால் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை வளாகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நக்கீரன் கலந்துகொண்டு உரையாற்றினார். மூன்றாவது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாட்டை களைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இந்திய உணவுக்கழக நிறுவனத்தில் வழங்கப்படும் கூலியை வழங்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் சுமைதூக்குவோருக்கு தினசரி கூலியை ரொக்கமாக வழங்கவேண்டும். என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : Bharatiya Janata Party ,Vedaratnam ,load lifting workers ,
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...