×

வெங்கமேடு அலுவலகத்திற்கு மின் இணைப்புகள் மாற்றம்

கரூர், மார்ச் 5: மின் இணைப்புகள் மாற்றம் செய்யப்பட்ட கரூர் வடக்குநகர பகுதி மின்நுகர்வோர்கள் வெங்கமேடு பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கரூர் வடக்குநகரம் இயக்கம், காத்தல் மின்சாரவாரியத்திற்குட்பட்ட 187மின்இணைப்புகள் வெங்கமேடு பிரிவு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூர் வடக்குநகரம் அலுவலகத்திற்குட்பட்ட வெங்கமேடு ரயில்வே பாலம் வடபுறம் உள்ள பகுதிகள், பசுபதிடெக்ஸ் ஏஒன் தியேட்டர் வரையுள்ள பகுதிகள் நிர்வாக காரணங்களுக்காகவும், எளிதில் சேவைகள் கிடைக்கும் வகையிலும், வெங்கமேடு பிரிவு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மக்கள் புதிய மின்இணைப்பு பெறுவதற்கும், மின்கட்டணம் செலுத்துவதற்கும் வெங்கமேடுபிரிவு அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டும் என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.

Tags : Venkamadu ,
× RELATED வெங்கமேடு சாலையில் சேதமான கழிவுநீர் வடிகால் பாலம்