×

உலக நாடுகளுக்கு இடையே செயற்கை இழை ஆடைகளுக்கு அதிக வரவேற்பு

திருப்பூர், மார்ச் 5: திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களின் கூட்டு முயற்சியால் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. செயற்கை இழைகளால் ஆன ஆடைகளின் உற்பத்தியில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என வர்த்தக செயலாளர் கூறினார்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் தொழில் துறையினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி அப்பாச்சி நகர் ஏற்றுமதியாளர் சங்க கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் மத்திய அரசின் வர்த்தக செயலாளர் அனுப் வாதவன் கலந்துகொண்டு பேசியதாவது:-
 திருப்பூர் பின்னலாடை சார்ந்த தொழில் துறையினர் கூட்டு முயற்சியால் குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. திருப்பூர் பின்னலாடை நிறைந்த நகரில் அனைத்துப் பகுதிகளுமே சுகாதாரமாக தூய்மையாக வைத்துள்ளீர்கள். நேதாஜி ஆயத்த ஆடை தொழில்பேட்டை பொழுதுபோக்கு நிறைந்த பார்க் போல் கட்டமைக்கப்பட்டது வியப்பாக உள்ளது. வியட்நாம் பங்களாதேஷ் போன்ற நாடுகள் ஐரோப்பிய யூனியனில் உள்ள ஒரு சில நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தங்களை ஏற்படுத்தி ஆடைகளை அதிகளவு ஏற்றுமதி செய்கிறது.

 திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் இதேபோன்று வரியில்லா ஒப்பந்த ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இரு வகையில் நாம் பார்க்கவேண்டும் ஒரு நாட்டிற்கு ஒரு பொருளை வரியின்றி ஏற்றுமதி செய்தால் அந்த நாட்டில் இருந்து ஏதாவது ஒரு பொருள் இங்கு இறக்குமதி செய்ய வேண்டும். அதுபோல் இறக்குமதி செய்தால் இந்திய நாட்டிலுள்ள உற்பத்தியாளர்கள் ஒரு சிலர் பாதிக்கும் சூழலை உருவாக்கும். ஆகவே இது குறித்து நாம் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.உலகம் முழுவதும் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. பெரும்பாலும் இந்தியாவில் பருத்தி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தைக்கப்படுகின்றது. செயற்கை இலைகளால் ஆன ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏற்றுமதி செய்ய வேண்டும். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு ஆர்ஓஎஸ்டிஎல் ரீ- பண்ட் கிடைப்பதில் காலதமதம் ஆவதாக பலர் முறையிட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படும். திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களின் தற்போதுள்ள தொழில் நெருக்கடிகளை எனக்கு ஈமெயிலில் அனுப்புங்கள். அது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார். தொழில் துறையினரின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதில் பின்னலாடை உற்பத்தியாளர்கள், சாய ஆலை உரிமையாளர்கள், பிரிண்டிங் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : reception ,world countries ,
× RELATED பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா அரசு...