×

திமுக தலைவர் பிறந்தநாள் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

நாமக்கல், மார்ச் 4: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த தினமான, கடந்த 1ம் தேதி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கலந்துகொண்டு, 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில், நகர செயலாளர்கள் சங்கர், ஆனந்த், முன்னாள் நகர பொறுப்பாளர் மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், சட்டத்திட்டக்குழு உறுப்பினர் நக்கீரன், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், ஒன்றிய செயலாளர்கள் கவுதம், பழனிவேல், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் சுகுமார்,  மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நந்தகுமார், மாணவர் அணி துணை அமைப்பாளர் குமரவேல், திமுக பிரமுகர் சக்திவேல்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...