×

கோமாரி நோய் தடுப்பூசி போட ஒத்துழைப்பு தர வேண்டும்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 4: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட ஒத்துழைப்பு தர வேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா பகுதிகளில் நடைபெற்று வரும் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஜான்சன் சார்லஸ் ஆய்வு செய்த பின் நிருபர்களிடம் கூறுகையில், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கடந்த மாதம் 28ம்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 19ம்தேதி நிறைவுபெறுகிறது. கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளுடன் முகாமிற்கு வரும்போது ஆதார் எண், செல்போன் ஆகியவற்றை கொண்டுவந்து கொடுத்து ஆன்லைன் கால் நடை கணக்குகளை ஏற்றியபின்புதான் கால்நாடைகளுக்கு காது வில்லை பொருத்தி பின்னர் தடுப்பூசி போடப்படும். வரும் காலங்களில் கால்நடைகள் காணாமல் போனால் அதற்கு இன்சூரன்ஸ் பெறுவதற்கு கால்நடை உரிமையாளர்களுக்கு பயனுடையதாக இருக்கும். எனவே விவசாயிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி 100 சதவீதம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடவேண்டும் என்றார்.

Tags :
× RELATED திருவாரூர் மாவட்ட கலெக்டர் விளக்கம்...