×

கல்பாடியில் பரபரப்பு காவல் சிறுவர் மன்றம் சார்பில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு 14 கிராமங்களில் நடந்தது

பெரம்பலூர்,மார்ச் 4:புதுநடுவலூர், செல்லியம் பாளை யம் உள்ளிட்ட 14 கிராமங் களில் காவல் சிறுவர் மன் றம்சார்பாக கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புண ர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் புது நடுவலூர், செல்லிய ம்பாளையம் கிராமங்களி ல் காவல் சிறுவர் மன்றம் சார்பில் கொரோனா வைர ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  இதன்படி புதுநடுவலூர் மானியத் தொடக்கப் பள்ளி யில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான தொடக்க விழாவிற்கு பள்ளித் தலை மையாசிரியர் லலிதா த லைமை வகித்தார். தொடர்ந்து செல்லியம்பாளையம், நொச்சியம், விளா முத்தூர், வெள்ளனூர், சத்திரமனை, தம்பிரான்பட்டி, கீழக்கணவாய், வேலூர் உட்பட 14தொடக்கப் பள்ளி களில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சாரண அமைப்பைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும் பொருட்டு மாணவ,மாணவிகள் தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல் மட்டுமன்றி, தங்களை சார்ந்தவர்களையும் சுத்தமாக இருக்கச் செய்தல், அடிக்கடி கைகழு வுதல், முகம்கழுவுதல், முகக்கவசம் அணிந்து கொள்ளுதல், தும்மல், இருமல் வரும்போது பரவாதிருக்க கைக்குட்டையை பயன்படுத்துதல், பள்ளி,வீடு மற்றும் பொதுஇடங்களை தூய்மை யாக வைத்துக் கொள்ளுத ல் ஆகியவற்றை அனைவ ரும் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் பரவும் முறை, நோ யின் தீவிரம், பாதுகாத்தல், புகை மற்றும் மதுப்பழக்கத் தினால் ஏற்படும் பாதிப்பு கள் குறித்தும் காவல் சிறுவர் மன்றத்தின் பணிகள், சாரண இயக்கத்தின் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும் சாரண மாணவர்கள் தூய்மைப் பணிகள் குறித்து பேசினர்.

Tags : villages ,Parabhava Police Children's Council ,
× RELATED மரக்காணம் பகுதியில் தாய்லாந்து நாட்டு மரவள்ளி பயிரிட விவசாயிகள் ஆர்வம்