×

குடிநீர் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஈரோட்டில் பேரணி

ஈரோடு, மார்ச் 4: ஈரோடு மாவட்ட அடைக்கப்பட்ட குடிநீர் விநியோகஸ்தர்கள் சார்பில் குடிநீர் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஈரோட்டில் நேற்று பேரணி நடந்தது. பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு நசியனூர் ரோடு சம்பத்நகர் பிரிவில் துவங்கிய பேரணி கொங்கு கலையரங்கம் பகுதியில் நிறைவடைந்தது. இந்த பேரணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஜான் ஆண்ட்ரோஸ் என்ற சின்னா தலைமை தாங்கினார். பின்னர், கோரிக்கை  தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்களாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறோம். எங்களிடம் ஓட்டுநர்களாகவும், கூலி தொழிலாளர்களாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலையே பிரதான வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறோம். தற்போது, நீதிமன்ற உத்தரவால் குடிநீர் உற்பத்தி, தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Tags : Erode ,drinking water sellers ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது