×

திருச்சுழி, நரிக்குடியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திருச்சுழி, மார்ச் 3:  திருச்சுழி, நரிக்குடி பகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு  கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்சுழி எம்எல்ஏ தங்கம் தென்னரசு வழிகாட்டுதலின்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நரிக்குடி தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள் ப.பா.போஸ், கண்ணன் ஆகியோர் தலைமையில் கிராமங்களில் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கமலி பாரதி , பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், இசலி ரமேஷ் உட்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இதேபோன்று திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தனபாண்டி தலைமையில் திருச்சுழியில் வங்கி முன்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வடக்கு ஒன்றிய பொருளாளர் சாமிக்கண்ணு, வடக்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சிவநாராயணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : MK Stal ,Birthday Celebration ,
× RELATED திருவள்ளூர் அருகே பரபரப்பு: பட்டா...