×

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு அன்னதானம்

தேவாரம், மார்ச் 3: கோம்பையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு, கொடியேற்றப்பட்டது.உத்தமபாளையம் ஒன்றியம், கோம்பை பேரூர் திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு உத்தமபாளையம் ஒன்றிய கழக பொறுப்பாளர் அணைப்பட்டி முருகேசன் தலைமை வகித்தார். பேரூர் கழக திமுக பொறுப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளரான தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து நகரில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags : Birthday ,MK Stalin ,
× RELATED 53வது பிறந்தநாள்: அஜித்துக்கு டுகாட்டி பைக் பரிசளித்த ஷாலினி