மாநில அளவிலான யோகா தேவகோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை

தேவகோட்டை, மார்ச் 3:  மாநில அளவிலான யோகா போட்டியில் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் மாவிடுதிக்கோட்டை நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.மாநில அளவிலான யோகா போட்டிகள் கடந்த வாரம் பழனியில் நடைபெற்றது. மாநிலங்களில் பல்வேறு ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.  தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் மாவிடுதிக்கோட்டை நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 1முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பிரிவுகளில் தங்கம் மற்றும் வெள்ளி மெடல்களை வாங்கிக் குவித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை கிராம மக்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி கவுரவித்தனர்.

Related Stories:

>