×

சேந்தமங்கலத்தில் அரசு கல்லூரி கட்டிடம் 5ம் தேதி திறப்பு விழா

சேந்தமங்கலம்,  மார்ச் 3: சேந்தமங்கலத்தில் ₹8 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள  அரசு கல்லூரியை, வரும் 5ம்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து  வைக்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை  மின்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேந்தமங்கலத்தில் புதிதாக அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு, அரசு  ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டாக  செயல்பட்டு வருகிறது. காளப்பநாயக்கன்பட்டி அடுத்த உத்திரகிடி காவல் ஊராட்சி கணவாய்மேடு என்ற  இடத்தில், 7 ஏக்கர்  இடம் தேர்வு செய்யப்பட்டு ₹8 கோடி  நிதி மதிப்பில், கல்லூரிக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் 5ம் தேதி  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இதற்கான  முன்னேற்பாடு பணிகளை, மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார். அப்போது, எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, கலெக்டர் மெகராஜ்,  எஸ்.பி. அருளரசு,  சந்திரசேகரன் எம்எல்ஏ, தாசில்தார் ஜானகி, கல்லூரி  முதல்வர் வெங்கடேசன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Opening Ceremony ,Sandamangalam ,Government College Building ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா